14 ஆண்டுகளை நிறைவு செய்த சுப்ரமண்யபுரம்… இயக்குனர் சசிகுமார் பகிர்ந்த நினைவலைகள்…

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (14:54 IST)
இயக்குனர் சசிகுமார் இயக்கி, ஜெய், சுவாதி ஆகியோர் நடிப்பில் உருவான சுப்ரமண்யபுரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

கடந்த 2008 ஆம் ஆண்டு இதே நாளில் சுப்ரமண்யபுரம் திரைப்படம் ரிலீஸானது. பெரிய நடிகர்கள், இயக்குனர், தொழில்நுட்பக் கலைஞர்கள் இல்லாமல் ரிலீஸான அந்த திரைப்படம், அதன் திரைக்கதை மற்றும் உருவாக்கம் காரணமாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் விமர்சனப்பூர்வமாக பாராட்டுகளக் குவித்து ஒரு Cult திரைப்படமாக இப்போது வரை கொண்டாடப்படுகிறது.

இந்த திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறையவடைந்துள்ளதை அடுத்து தற்போது படத்தின் இயக்குனர் சசிகுமார் படம் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அதில் “ஜூலை 4 எப்போதுமே ஸ்பெஷலான நாள். 14 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் சுப்ரமண்யபுரம் ரிலீஸ் ஆனது. நேற்றுதான் நடந்தது போல இருக்கிறது. இன்று வரை ரசிகர்கள் அந்த படத்தைக் கொண்டாடுவதை எண்ணி மிகவும் பெருமையாக உள்ளது.” எனக் கூறியுள்ளார்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by M.sasikumar (@sasikumardir)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்