சசிகுமார் அடுத்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வியாழன், 16 ஜூன் 2022 (21:46 IST)
பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமார் நடித்த அடுத்த திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது
 
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான சசிகுமார் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று களறி. ஹேமந்த் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ளார் என்பதும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் நாளை மாலை ஐந்து முப்பது மணிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது
 
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்