மக்கள் என்ன முட்டாளா? பிக்பாஸ் செட்டில் கமலிடம் ஆதங்கத்தை வெளிபடுத்திய ஸ்ரீ பிரியா!!

Webdunia
ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (11:36 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் பெரும் விரும்பி பார்க்க காரணம் கமல்ஹாசன். அவரது அதிரடி பேச்சும், செய்கைகளும் மக்களை வெகுவே கவர்ந்துள்ளது.


 
 
இந்நிலையில், நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக பேசும் ஸ்ரீ பிரியா மற்றும் காமெடி நடிகர் சதீஷ் கலந்துக்கொண்டனர். 
 
ஸ்ரீ பிரியா மற்றும் சதீஷ் மக்களுக்கு உள்ள கேள்விகளை அவர்களது சார்பாக கமலிடம் கேட்டனர். அதற்கு கமலும், பிக்பாஸும் பதிலதித்தனர். 
 
தனது பல கேள்விகளில் ஒரு கேள்வியாக, ஒரு வாரம் முழுவதும் ரசிகர்கள் ஓட்டுப்போட்டுள்ளனர். யார் நிகழ்ச்சியைவிட்டு சென்றால் நன்றாக இருக்கும் என சிந்தித்து மக்கள் வாக்களிக்கின்றனர். ஆனால், நீங்கள் வெள்ளிக்கிழமை காயத்ரியை காப்பாற்றியுள்ளீர்கள். ஓட்டு போட்ட மக்கள் என்ன முட்டாள்களா? என ஸ்ரீ பிரியா கேள்வி எழுப்பினார்.
 
இந்த கேள்விக்கு ரசிகர்களின் கைத்தட்டல் அரங்கை அதிர வைத்தது. இதற்கு கமல், என்னுடைய கைத்தட்டலாக நீங்கள் பதில் கூறிவிட்டீர்கள் என்று கூறினார். பின்னர் பிக்பாஸ் இதற்கான விளக்கமளிப்பார் என கூறினார். பிக்பாஸும் இதற்கான விளக்கத்தை கொடுத்தார்.
அடுத்த கட்டுரையில்