கொட்டுக்காளி படத்துக்காக குரல் மாற்றத்துக்காக ரிஸ்க் எடுத்த சூரி!

vinoth
ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (11:24 IST)
விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனான சூரி இப்போது கொட்டுக்காளி மற்றும் இன்னொரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை கூழாங்கல் படத்தின் மூலம் கவனம் பெற்ற பி எஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். அன்னாபென் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் கொட்டுக்காளி திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ள நிலையில்  தற்போது திரையிடப்பட்டு வருகிறது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் பெர்லினுக்கு சென்றுள்ளனர்.

இந்த படம் சம்மந்தமாக சூரி சமீபத்தில் அளித்துள்ள நேர்காணலில் “இந்த படத்தில் நான் தொண்டை பிரச்சனையால் அவதிப்படுபவனாக நடித்துள்ளேன். அதனால் அந்த படத்துக்காக டப்பிங் பேசும்போது நான் ஒரு மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று சில நாட்டு மருந்துகளை எடுத்துக் கொண்டேன். அதனால் தொண்டைக் கட்டிக்கொண்டது. அப்படிதான் நான் கொட்டுக்காளி படத்துக்கு டப்பிங் பேசினேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்