அடுத்தடுத்து விலகும் பிரபலங்கள்… குக் வித் கோமாளி ரசிகர்கள் அதிருப்தி!

vinoth
ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (11:17 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி குக் வித் கோமாளி, புகழ், அருண்விஜய், cooku with comali, arun vijay, pughazஅனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்த புகழ் சினிமாவில் கதாநாயகனாகும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.

இதுவரை நான்கு சீசன்கள் முடிந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது. அதில் போட்டியாளர்களாக யார் யார் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து நடுவராக பங்கேற்று வந்த வெங்கடேஷ் பட் ஐந்தாவது சீசனில் தான் பங்கேற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இன்னொரு நடுவரான செஃப் தாமுவும் இந்த சீசனில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு பேரும் அடுத்தடுத்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு அது ஏமாற்றமாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்