சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான ’சூரரைப்போற்று’ திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக நேற்று சூர்யா அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகிலும் தயாரிப்பாளர் மத்தியிலும் திரையரங்கு உரிமையாளர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் சூரரைப்போற்று திரைப்படம் ரூபாய் 60 கோடிக்கு விற்பனை ஆனதாக தகவல்கள் வெளியானது ஆனால் தற்போது இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் சூர்யாவின் 2டி நிறுவனமே இதனை கிளப்பி விடுவதாகவும் உண்மையில் இந்த படம் ரூபாய் 45 கோடிக்கு மட்டுமே விற்பனையாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் 60 கோடி என்ற நிலையில் ஓடிடி மூலம் ரூபாய் 45 கோடி தற்போது வருமானம் கிடைத்துள்ளது. மேலும் சன் டிவி இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கி இருப்பதால் அதிலிருந்து ஒரு 15 கோடி வருமானம் கிடைத்துள்ளது. எனவே இந்த படத்தின் பட்ஜெட் தொகை மட்டும் தான் தற்போது மீண்டு வந்துள்ளதாகவும் லாபம் என்பது இல்லை என்றும் கூறப்படுகிறது
ஒருவேளை இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் ஒரு சில கோடிகளுக்கு விற்பனை ஆனால் மட்டுமே அந்தத் தொகை மட்டுமே படக்குழுவினர்களுக்கு லாபமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது