'மாஸ்டருக்கு’ ரூ.100 கோடி: சூர்யாவை அடுத்து விஜய்க்கு வலைவிரிக்கும் அமேசான்

ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (08:32 IST)
சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் வேறு வழி இல்லாமல் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்பதும் இந்த படம் அமேசானில் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
சூர்யாவின் இந்த முடிவை அடுத்து வேறு சில முக்கிய நடிகர்களும் ஓடிடி தளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக திரையரங்குகளில் மட்டும் தான் ரிலீஸாகும் என்று பிடிவாதமாக இருக்கும் மாஸ்டர் திரைப்படம் தற்போது தனது முடிவில் இருந்து பின்வாங்க இருப்பதாக கூறப்படுகிறது 
 
சூர்யாவின் சூரரைபொற்று படத்திற்கு ரூபாய் 60 கோடி கொடுத்த அமேசான் நிறுவனம் ’மாஸ்டர்’ படத்திற்கு 100 கோடி வரை கொடுக்க முன் வந்ததாகவும் இதனை அடுத்து ’மாஸ்டர்’ தயாரிப்பாளர் ஓடிடி பக்கம் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
அமேசான் ஓடிடி தளம் மூலம் கிடைக்கும் 100 கோடி, சாட்டிலைட் விற்பனை, வெளிநாட்டு உரிமை விற்பனை, ஹிந்தி டப்பிங் உரிமை என அனைத்தையும் சேர்த்தால் ரூபாய் 200 கோடி வரை வர வாய்ப்பிருப்பதாகவும் இந்த கொரோனா நேரத்தில் இதை விட்டால் வேறு வழியில்லை என்றும் ’மாஸ்டர்’ தயாரிப்பாளர் யோசிப்பதாகவும் கூறப்படுகிறது
 
எனவே அமேசான் விரித்த வலையில் சூர்யா சிக்கியது போல் ’மாஸ்டர்’ மிக விரைவில் சிக்க வாய்ப்பிருப்பதாகவும் அனேகமாக இந்த படம் தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்