பிக்பாஸ் பிரபலம் சோனாலி போகட் காலமானார் ! முதல்வர் இரங்கல்

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (22:05 IST)
பிரபல பிக்பாஸ் பிரபலம் சோனாலி போகட்  மாரடைப்பால் காலமானார்.

பாஜக கட்சியைச் சேர்ந்தவரும் இந்தி பிக்பாஸில் கலந்து கொண்டு லட்சக் கணக்கான ரசிகர்களைக் கவர்ந்தவருமான நடிகை சோனாலி போகட் இன்று மாரடைப்பால் காலமானார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட அவர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளளனர். 

ஹாரியானாவைச் சேர்ந்த சோனாலில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக அனைவருக்கும் பரீட்சயமானவர். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்தவர் ஆவார்.
 இவரை டிக்டாகில் 19 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பாலோ செய்தனர். 

பிக்பாஸ் சீசன் 14 ல் கலந்துகொண்டு பிரபலமானார். கடந்த 2008 ல் பாஜ்கவில் இணைந்து செயல்பட்ட சோனாலி இன்று மாரைப்பால் காலமானார். அவருக்கு ஹரியானா முதல்வர் எம்.எல்.கத்தார் உள்ளிட்ட தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்