ஹெட்போன் ஆர்டர் செய்த நடிகை பேரதிர்ச்சி ! - என்ன வந்தது தெரியுமா?

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (12:48 IST)
ஆன்லைன் மூலம் ஹெட்போன் ஆர்டர் செய்த பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு, இரும்புத்துண்டு கொடுத்து மோசடி!


 
இணையதளங்கள் மூலம் விலைமதிப்பற்ற பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சில நேரங்களில் பயங்கரமான அதிர்ச்சியும் காத்திருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் நடிகை சோனாக்‌ஷிக்கு நடந்துள்ளது.
 
பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, அமேசான் இணையதளம் மூலம் ரூ.18,000 மதிப்புள்ள ஹெட்போனை ஆர்டர் செய்துள்ளார். ஆன்லைன் வழியாக அதற்கு உடனடியாக பணமும் செலுத்தியுள்ளார். 
 
அதன்படி, அமேசான் நிறுவனம் கடந்த 11ம் தேதி அவரது வீட்டில் பார்சலை டெலிவரி செய்தது. பார்சலை திறந்த பார்த்த சோனாக்‌ஷி சின்ஹா, அதில் ஹெட்போனுக்கு பதிலாக இரும்புத்துண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். 
 
இதையடுத்து உடனடியாக அவர் அமேசான் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் சரியாக விளக்கமளிக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சோனாக்‌ஷி சின்ஹா, அமேசான் நிறுவனம் தன்னை ஏமாற்றியதை ஆதாரத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
இதனையடுத்து, இந்த தவறுக்காக அவரிடம் வருத்தம் தெரிவித்த அமேசான் நிறுவனம், விரைவான இதற்கான தீர்வு எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்