வடசென்னை இளைஞராக மகத்தும், அவரை காதலிக்கும் பணக்கார பெண் கேரக்டரில் ஐஸ்வர்யாவும் நடிக்கவுள்ளனர். இந்த படம் ரொமான்ஸ் மற்றும் காமெடியுடன் கூடியது மட்டுமின்றி கிளைமாக்ஸில் இன்றைய இளைஞர்களுக்கு தேவையான ஒரு நல்ல மெசேஜ் சொல்லப்படும் வகையில் இருக்கும் என இயக்குனர் பிரபுராம் தெரிவித்துள்ளார். இயக்குனர் பிரபுராம், பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் உதவியாளர் என்பதும் இன்றைய முதல் ஷாட்டை வெங்கட்பிரபு கிளாப் அடித்து தொடங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.