எனக்கு தீபாவளி நவம்பர் 25 தாண்டா: எஸ்.ஜே.சூர்யா டுவிட்

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (21:38 IST)
எனக்கு தீபாவளி நவம்பர் 25 தாண்டா என பிரபல நடிகர் எஸ்ஜே சூர்யா தனது டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த தேதிதான் தனக்கு தீபாவளி என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாநாடு படத்திற்காக தனது பகுதிக்கான டப்பிங் பணியை ஐந்து நாட்களில் முடிந்ததாகவும் எனது நாடிநரம்பு,முதுகெலும்பு மற்றும் தொண்டை ஆகியவை குறைந்தது 10 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்ற அளவுக்கு கடுமையான வேலை என்றும் கடும் வேலை பளு காரணமாக வலி பின்னுது என்னும் குறிப்பிட்டுள்ளார் 
 
மேலும் ஒரு விஷயத்தை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு தீபாவளி நவம்பர் 25 தாண்டா என்று குறிப்பிட்டுள்ளார். சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன்சங்கர்ராஜா இசையில் உருவான மாநாடு திரைப்படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்