புதிய தொழில் துவங்கிய சிவகார்த்திகேயன்... மனுஷன் தேறுவாரா?

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (16:20 IST)
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து அசுர வளர்ச்சி அடைந்து
கோலிவுட்டை அசர வைத்தவர் சிவகார்த்திகேயன். குட்டீஸ்களின் மனதில் ரஜினி, விஜய்யை அடுத்த இடத்தில் உள்ளார். சமீப காலமாக நடிப்பு தவிர படத் தயாரிப்பிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.
 
மிகக்குறுகிய காலத்திலேயே தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னை ஹீரோவாக டாப் இடத்தை பிடித்துவிட்டார். நடிப்பு,  தயாரிப்பு என இரண்டிலும் பிசியாக இருந்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது புதிய தொழில் ஒன்றை துவங்க உள்ளாராம். ஆம், ஏசியன் சினிமாஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து சிவகார்த்திகேயன் சென்னையில் (ASK) ஏசியன் சிவகார்த்திகேயன் சினிமாஸ் என்ற திரையரங்கை துவங்க உள்ளாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.    

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்