ஜெயிலர் ஹிட்டால் நெல்சனுக்கு வலைவிரிக்கும் பிரபல ஹீரோ!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (08:55 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வரிசையாக தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களின் தோல்வியால் பாதிக்கப்பட்டு இருந்த ரஜினிக்கு மீண்டும் ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது ஜெயிலர்.

பீஸ்ட் என்ற தோல்வி படத்துக்குப் பிறகு நெல்சன் இயக்கிய படம் என்பதால் முதலில் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பில்லாமல் இருந்தது. ஆனால் ரிலீஸ் சமயத்தில் மிகப்பெரிய ரஜினி அலை வீசியது. இந்நிலையில் இப்போது 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது நெல்சன் அடுத்து யாரை வைத்து படம் இயக்குவார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவரின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன், அவரோடு சேர்ந்து படம் பண்ண தூதுவிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இருவரும் ஏற்கனவே டாக்டர் என்ற ஹிட் படத்தை கொடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்