இங்கிலாந்தில் ஜெயிலர் படம் பார்த்த ரசிகர்கள் அதிருப்தி! பின்னணி என்ன?

சனி, 12 ஆகஸ்ட் 2023 (08:14 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வரிசையாக தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களின் தோல்வியால் பாதிக்கப்பட்டு இருந்த ரஜினிக்கு மீண்டும் ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது ஜெயிலர். பீஸ்ட் என்ற தோல்வி படத்துக்குப் பிறகு நெல்சன் இயக்கிய படம் என்பதால் முதலில் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பில்லாமல் இருந்தது. ஆனால் ரிலீஸ் சமயத்தில் மிகப்பெரிய ரஜினி அலை வீசியது.

இந்நிலையில் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் முதல் நாளில் இந்திய அளவில் 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியா போலவே உலகம் முழுவதும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இங்கிலாந்தில் மட்டும் படம் பார்த்த ரசிகர்களுக்கு அதிருப்தியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஏனென்றால் ஜெயிலர் படத்தின் வன்முறைக் காட்சிகளுக்கு அந்த நாட்டு சென்சார் போர்டு தடா போட்டு நிறைய காட்சிகளைக் கட் செய்துவிட்டதாம். இதனால் படம் பார்த்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்