நடிக்க வரலைன்னா பரவாயில்ல.. கூப்பிட்டு வாங்க! – அந்த மனசுதான் ரஜினிகாந்த்!

சனி, 12 ஆகஸ்ட் 2023 (10:26 IST)
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் அதில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று வைரலாகியுள்ளது.



நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள படம் ஜெயிலர். இந்த படத்தில் மோகன்லால், ஷிவ் ராஜ்குமார், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். வெளியான முதல் நாளே ரூ.72 கோடி வரை வசூல் செய்துள்ள ஜெயிலர் தொடர்ந்து திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வருகிறது.

இந்நிலையில் ஜெயிலர் வெற்றிக் குறித்து பேட்டியளித்த நெல்சன் படப்பிடிப்பில் ரஜினி செய்த செயல் குறித்து பேசியுள்ளார். ஜெயிலர் படத்தின் ப்ளாஷ்பேக் காட்சியில் நடிகர் ரஜினிகாந்துடன் சிறை கைதியாக ஒருவர் நடித்துள்ளார். அந்த ஜூனியர் ஆர்டிஸ்ட்டால் அந்த காட்சியில் சரியாக நடிக்க முடியவில்லை. சில ரீடேக்குகள் எடுத்ததால் அவருக்கு பதிலாக வேறு நபரை நடிக்க வைக்கலாம் என பேசியிருக்கிறார்கள்.

அதற்கு ரஜினிகாந்த் “அவர் இந்த படத்தில் நடிக்க போவதாக வீட்டில் சொல்லிவிட்டு நம்பிக்கையோடு வந்திருப்பார். அவருக்கு நடிக்க வரவில்லை என்றால் பரவாயில்லை. அவரை ஏமாற்ற வேண்டாம். அழைத்து வாருங்கள்” என சொல்லி அந்த நபரை வைத்தே அந்த காட்சியை படமாக்கி இருக்கிறார்கள். ரஜினிகாந்தின் இந்த செயல் குறித்து சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் பலரும் நெகிழ்ச்சியோடு பேசி வரும் நிலையில் அந்த ஜூனியர் ஆர்டிஸ்ட் நடித்த காட்சியும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்