முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த சிவகார்த்திகேயன்!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (14:27 IST)
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையிலும், சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டுமென நினைத்த இப்போது அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை ஸ்பைடர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள 1946 ஆகஸ்ட் 16 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “முருகதாஸ் சார் இயக்கிய ஏழாம் அறிவு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஸ்க்ரிப்ட் எழுதினேன். அவர் தயாரித்த எங்கேயும் எப்போதும் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அவர் கதை எழுதிய மான் கராத்தேவில் ஹீரோவாக நடித்தேன். இப்போது அவர் தயாரித்துள்ள படத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்துள்ளேன். இன்னும் ஒன்றுதான் பாக்கி. அது சீக்கிரம் நடக்கும்” என சூசகமாக அவர் இயக்கத்தில் நடிப்பது குறித்து பேசியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்