ஆன்லைன் ரம்மியை விட மோசமானது டாஸ்மாக், அதை மூடுங்கள்: பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ்..!

ஞாயிறு, 26 மார்ச் 2023 (14:56 IST)
ஆன்லைன் ரம்மியை விட மிக மோசமானது டாஸ்மாக் என்றும் எனவே டாஸ்மாக் கடைகளை முதலில் மூடுங்கள் என்றும் பிக் பாஸ் போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
ஆன்லைன் ரம்மி காரணமாக 10க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில் இது குறித்த மசோதா சமீபத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மியை விட குடி நிறைய குடும்பங்களை அழிக்கிறது என்றும் எனவே முதலில் டாஸ்மாக்கை மூடுங்கள் என்றும் பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
மேலும் குடியால் ஆதரவற்று நிற்பவர்கள் தமிழ்நாட்டில் அதிகம் என்றும் இந்த கருத்தை கூறியதால் என்னை அரசியலுக்கு எழுக்காதீர்கள் என்றும் உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த டுவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்