பொங்கலுக்கு வருகிறது சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில் டீசர்!

vinoth
புதன், 18 டிசம்பர் 2024 (07:33 IST)
தர்பார் படத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் நடிக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்படவில்லை. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் வித்யுத் ஜம்மால், விக்ராந்த் மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர்.

கிட்டத்தட்ட 90 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தின் டைட்டில் மற்றும் அறிமுக டீசர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ரிலீஸாகும் எனத் தெரிகிறது.

இந்த படத்துக்கு இடையே முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்கி வருகிறார். தற்போது அந்த படத்தின் ஷூட்டிங்கில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்