தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர் பா.ரஞ்சித். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை அடுத்து, மெட்ராஸ், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கபாலி, காலா ஆகிய படங்களை அடுத்து, ஆர்யாவுடன் சட்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களை இயக்கினார்.
இந்நிலையில் தற்போது சமீபத்தைய இணைவாக இந்த படத்தில் பஹத் பாசில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம்தான் சில ஆண்டுகளுக்கு முன்னால் ரஞ்சித் கான்ஸ் திரைப்பட விழாவில் போஸ்டர் வெளியிட்ட வேட்டுவம் படம் என சொல்லப்படுகிறது. தங்கலான் படம் போல இதுவும் ஒரு மேஜிகல் ரியலிச பாணியிலான படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஜனவரி 8 ஆம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.