மகாராஜா பட இயக்குனரை சந்தித்து பாராட்டிய இயக்குனர் நித்திலன் சாமிநாதன்!

vinoth
புதன், 26 ஜூன் 2024 (07:20 IST)
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிவருகிறது.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது மகாராஜா. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் மற்றும் சிங்கம்புலிஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்வதாகவும், அதிலும் குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சி எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் படம் அந்த கிளைமேக்ஸ் காட்சிக்காக அதீத டிராமவை கொண்டு செயற்கை தன்மை கொண்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனாலும் படம் 10 நாட்களில் 81 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்திருக்கும் மகாராஜா விரைவில் 100 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதனை அழைத்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்