மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட பிரபுதேவாவின் 'பேட்ட ராப்' பட டீசர்!

J.Durai

திங்கள், 24 ஜூன் 2024 (10:41 IST)
நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 
 
இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
 
இயக்குநர் எஸ் ஜே சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி கே தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான்   இசையமைத்திருக்கிறார். A.R மோகன்  கலை இயக்கத்தை கவனிக்க பட தொகுப்பு பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார். இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை புளூ ஹில் ஃபிலிம்ஸ் மற்றும் புளூ ஹில் நைல்  கம்யூனிகேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி. சாம்  தயாரித்திருக்கிறார்.  
 
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 
 
இந்த டீசரில் நடனப்புயல் பிரபுதேவாவின் அசத்தலான நடனமும் , ஆக்சன் காட்சிகளும், வேதிகாவின் வித்தியாசமான தோற்றமும்.. ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்