நாளை அயலான் டீசர்: மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (17:33 IST)
சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று நேற்று நாளை என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் இயக்கிய அடுத்த திரைப்படம் அயலான். இந்த படம் கடந்த மூன்று ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது என்பதும் சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகளை கொண்ட இந்த படம் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு கட்டத்தில் உள்ளன. இந்த நிலையில் திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் இந்த படத்தின் டீசரை மிகப்பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்