லியோ படத்தின் இடைவேளையில் அயலான் பட டீசர்!

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (14:43 IST)
சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தாலும் இந்த படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பில்லை என்றும்  கிராபிக்ஸ் காட்சிகளையும் பணி அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படத்தின் டீசர் நாளை இணையதளத்தில் ரிலீஸ் ஆகிறது.

இதையடுத்து அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் லியோ படத்தின் இடைவேளையின் போது அயலான் டீசர் திரையரங்குகளிலும் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்