ஏ ஆர் ரஹ்மானிடம் அட்வான்ஸ் கேட்ட சிவகார்த்திகேயன்!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (14:16 IST)
ஏ ஆர் ரஹ்மான் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துள்ள நிலையில் தன்னை வைத்து ஒரு படம் தயாரிக்குமாறு சிவகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித்துக்கு அடுத்தபடியாக அதிக சந்தை மதிப்பு உள்ள கதாநாயக நடிகராக சிவகார்த்திகேயன் வளர்ந்து வருகிறார். ஆனாலும் சமீபகாலமாக அவரின் படங்கள் ஏமாற்றம் அளிக்கும் விதமாக உள்ளன. இதனால் அவருக்கு பல கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் ஏ ஆர் ரஹ்மான் தயாரித்துள்ள 99 சாங்க்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் ‘சார் நானும் ஒரு ஹீரோவாக படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் தயாரிபபாளராகி விட்டீர்கள். செக் புக்கெல்லாம் வைத்து இருப்பீர்கள். எனக்கு ஏதாவது அட்வான்ஸ் செக் கொடுக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்