சூர்யாவுக்கு ‘காக்க காக்க’… சிவகார்த்திகேயனுக்கு ‘அமரன்’- சாய் பல்லவி நம்பிக்கை!

vinoth
திங்கள், 28 அக்டோபர் 2024 (11:34 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தீபாவளியன்று ரிலீஸாகிறது.

படத்தில் சிவகார்த்திகேயனுடன் சாய்பல்லவி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரிலீஸாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த படம் மறைந்த கேப்டன் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள சாய்பல்லவி “சூர்யா சாருக்கு எப்படி காக்க காக்க திரைப்படம் அமைந்ததோ, அதுபோல சிவகார்த்திகேயனுக்கு அமரன் படம் அமையும். எப்படி சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் காக்க காக்க படத்துக்கு முன் பின் என சொல்கிறோமோ அது போல சிவகார்த்திகேயனுக்கும் அமையும்” என நம்பிக்கையாகப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்