சமீபத்தில் அவர் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய ஆவேஷம் திரைப்படம் பிளாக்பஸ்டராகி 150 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. நேற்று ரிலீஸான புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் அறியப்படும் நடிகராக இருக்கும் ஃபஹத் அடுத்து ஒரு நேரடி இந்தி படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. நேற்று அவர் நடிப்பில் உருவான மாரீசன் திரைப்படம் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் அவர் அளித்துள்ள நேர்காணலில் “எனது நடிப்பு பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தினால் நான் பார்சிலோனாவுக்கு சென்று uber ஓட்டுனராகப் பணியாற்றுவேன். மக்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு அழைத்து செல்வது அழகான வேலை. ஒருவரின் பயணத்தில் பங்கேற்பது மிகவும் அழகான ஒன்று” எனத் தெரிவித்துள்ளார்.