வெந்து தணிந்தது காடு படத்தில் சிங்கில் ஷாட் சண்டைக்காட்சி !

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (20:23 IST)
சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு'  படத்தின் முக்கிய அப்டேட்  வெளியாக உள்ளது.
 

மாநாடு திரைப்படத்துக்கு பிறகு சிம்பு நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு . கௌதம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கயாடு லோகர் மற்றும் இட்னானி நடித்துள்ளனர்.

இசைப்புயல்  ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை வெல்ஸ் இன்டர் நேசனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்கிறார்.

 இப்படம் வரும்  செப்டம்பர் 15 தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடந்துவரும் நிலையில் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி முடித்துள்ளார் சிம்பு.  

இந்த நிலையில், மாநாடு படத்தில் சிங்கில் ஷாட் எடுக்கப்பட்டதைப் போன்று ‘வெந்து தணிந்தது காடு ‘படத்தில்   சிங்கில் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்