சிம்புவுக்கு கதை சொன்ன ஏ ஆர் முருகதாஸ்..? கோலிவுட்டில் பரவும் தகவல்!

சனி, 30 ஜூலை 2022 (10:48 IST)
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தர்பார் படத்தின் தோல்விக்குப் பின்னர் தன்னுடைய அடுத்த படத்தை அறிவிக்காமல் இருக்கிறார்.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையிலும், சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகினார் என்று சொல்லப்படுகிறது.

அதையடுத்து மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டுமென நினைத்த இப்போது தனது அடுத்த படத்துக்காக பல கதாநாயகர்களிடம் கதை சொல்லி வருகிறாராம். இது சம்மந்தமாக பல ஹீரோக்களுக்கு அவர் கதை சொல்லி உள்ளதாக தகவல் வெளியானது. அந்த வரிசையில் இப்போது சிம்புவும் இணைந்துள்ளார். சமீபத்தில் சிம்புவை சந்தித்து முருகதாஸ் கதை சொல்லி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிம்பு நடிப்பில் அடுத்தடுத்து வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்