விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த மாதம் வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள், பிரபலங்கள், விமர்சகர்கள் என பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் இன்று இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது சுமார் 4.30 நிமிட காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த காட்சியில் பிரபல பின்னணி பாடகி ஜானகி நடித்துள்ளார். படத்தில் திரிஷாவிற்கு பாடகி ஜானகியை பிடிக்கும் என்பதால் இந்த காட்சி அதில் இணைக்கப்பட்டிருக்ககூடும்.