16 வயதில் இருந்து நான் காதலிப்பது பிரபு சாரை மட்டும்தான்- பிரபல நடிகை

Sinoj
திங்கள், 18 மார்ச் 2024 (17:34 IST)
16 வயதில் இருந்து நான்  காதலிப்பது பிரபு சாரை மட்டும்தான் என்று பிரபல நடிகை ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.
 
தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஐஸ்வர்யா . இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து எஜமான், ஆறு, பழனி, அபியும் நானும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
 
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில்.  என் 16 வயது முதல் நான் காதலிப்பது பிரபு சாரை மட்டும்தான் என்று தெரிவித்தார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நான் என்னுடைய 16 வயதில் பாலைவன ரோஜாவை படத்தைப் பார்த்தேன். அப்படத்தில்தான் பிரபுசாரை முதன் முறையாக பார்த்து அவரை காதலிக்க ஆரம்பித்தேன்.
 
அந்தப் படத்தைப் பார்த்தது முதல் பிரபு சார் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.  நடிகர் பிரபுவின் வெறித்தனமான ரசிகை நான் என்பது அவருடைய மனைவி புனிதா அக்காவிற்கும் தெரியும் என்று தெரிவித்தார்.
 
மேலும், ஆம்பள படத்தில் நடிக்கும்போது, அவரிடம் விளையாட்டாக என்னை பெரிய வீடாகவோ, சின்ன வீடாகவோ வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன்.
சுயம்வரம் படத்தில் முதலில் கமிட்டானது வேறு ஒரு நடிகை. ஆனால் கழிப்பறை தொடர்பான காட்சி என்பதால் அவர் நடிக்கவில்லை. அவருக்குப் பதிலாக பி.வாசு என்னை கமிட் செய்தார் என்று தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்