பாகுபலி அளவுக்கு இல்லை என்றாலும்.. தமிழ் சினிமா பெருமைபடும் படமாக இருக்கும்.. சிம்பு கொடுத்த அப்டேட்!

vinoth
புதன், 5 பிப்ரவரி 2025 (09:42 IST)
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் தேசிங் பெரியசாமி. அதன் பிறகு அவர் ரஜினிக்காக பிரம்மாண்ட கதை ஒன்றை எழுதினார். ஆனால் திடீரென்று அதிலிருந்து ரஜினி விலகினார். அதன் பின்னர் சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அந்த படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் பின்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அந்த படத்தில் இருந்து விலகியது. அதன் பின்னர் சிம்புவும் தேசிங்கும் புதிய தயாரிப்பாளரைத் தேடி வந்தனர். இந்நிலையில் இப்போது அந்த பெரிய பட்ஜெட் படத்தை சிம்புவே தன்னுடைய ‘ஆத்மன் சினி ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இது சிம்புவின் ஐம்பதாவது படமாக உருவாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தைத் தயாரிப்பது குறித்து பேசியுள்ள சிம்பு “டிஜிட்டல் மற்றும் ஓடிடி மார்க்கெட் இப்போது வீழ்ச்சி அடைந்திருந்தாலும் நான் இந்த மிகப்பிரம்மாண்ட படத்தை தயாரிக்கிறேன். இந்த படம் பாகுபலி போல இல்லை என்றாலும், கண்டிப்பாக தமிழ் சினிமா பெருமை படும் ஒரு படமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்