லைகா புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட்டின் கோரிக்கையினை அரசு கவனமுடன் பரிசீலித்து, "விடாமுயற்சி" என்ற திரைப்படத்திற்கு 06.02.2025 அன்று வெளியாகும் நாள் மட்டும் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சியினை காலை 9.00 மணி முதல் இரவு 2.00 மணி வரை (ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் மட்டும்) திரையரங்குகளில் திரையிட 1955-ம் ஆண்டு, தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) சட்டம், 11-ல் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி, 1957-ம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் உள்ள 'சி' படிவ நிபந்தனை 14 மற்றும் 14-A-வினை தளர்த்தி, இதுகுறித்து முன்கூட்டியே உரிமம் வழங்கும் அதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட கேளிக்கை வரி அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு, அனுமதிக்கலாம் என அரசு முடிவு செய்து, அவ்வாறே ஆணையிடுகிறது.