இதுதான் தேசிங் பெரியசாமி படத்தின் லுக்கா?... சிம்புவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Webdunia
சனி, 15 ஜூலை 2023 (08:20 IST)
சிம்பு பத்து தல படத்தை முடித்துவிட்டு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்துக்காக தயாராகி வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அதையடுத்து சிம்பு ஐசரி கணேஷ் தயாரிப்பில் அடங்கமறு இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படி இரண்டு படங்கள் அடுத்தடுத்து வரிசையில் இருந்தாலும் சிம்பு இப்போது லண்டன் மற்றும் மலேசியா என நாடு நாடாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.

மலேசியாவில் யுவன் ஷங்கர் ராஜாவின் கச்சேரிக்காக இப்போது முகாமிட்டுள்ள சிம்பு, நீண்ட தலைமுடி மற்றும் முறுக்கு மீசையோடு காணப்படுகிறார். இந்த புதிய புகைப்படத்தை பார்த்த அவரின் ரசிகர்கள் இதுதான் அவரின் அடுத்த பட கெட்டப்பா என கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்