யோகி பாபுவுடன் இணைந்த விஜய் பட இயக்குநர்!

வெள்ளி, 14 ஜூலை 2023 (16:24 IST)
ஒரு புதிய படத்தில்  நடிகர் யோகி பாபுவுடன் இணைந்துள்ளார் இயக்குநர் சிம்புதேவன்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் சிம்புதேவன்.  இவர், வடிவேலுடன் இணைந்து இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, அறை எண் 305 ல் கடவுள், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், விஜய் உடன் இணைந்து  புலி, கசட தபற உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில்,  இவரது புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபுவின் நடிப்பில் புதிய படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் புதிய அறிவிப்பை இன்று மாலை  6 மணிக்கு வெளியாகும் என்று இயக்குநர் சிம்புதேவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

உங்கள் அனைவர் வாழ்த்துக்களோடு.. pic.twitter.com/wYvyRKbP2f

— Chimbu Deven (@chimbu_deven) July 14, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்