அடுத்தடுத்து வரும் வாய்ப்பு… அதிரடியாக சிம்பு செய்த வேலை!

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (16:55 IST)
சிம்பு நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் உருவாக உள்ள நிலையில் சந்தடி சாக்கில் தனது சம்பளத்தை ஏற்றியுள்ளாராம்.

நடிகர் சிம்பு இப்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்குப் பிறகு அவர் மிஷ்கின், சேரன் உள்ளிட்ட பல இயக்குனர்களிடம் கதை கேட்டு ஓகே செய்துள்ளார். இந்நிலையில் இப்போது இயக்குனர் சுசீந்தரன் சிம்புவிடம் கிராமியக் கதை ஒன்றை சொல்லி அதை ஓகே வாங்கியுள்ளாராம்.

மாநாடு படத்துக்குப் பிறகு சிம்பு சுசீந்தரன் இயக்கத்தில்தான் நடிப்பார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போதே சிம்புவின் படத்தின் வேலைகளை சுசீந்தரன் மும்முரமாக செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் மாநாடு படத்துக்கு முன்னதாகவே இந்த படத்தில் நடிக்க உள்ளாராம் சிம்பு. இந்நிலையில் சுசீந்தரன் குறைந்த பட்ஜெட்டில் 30 நாட்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் சிம்புவிடம் மிஷ்கின், ராம் மற்றும் சேரன் உள்ளிட்ட இயக்குனர்கள் கதை சொல்லி காத்திருக்கிறார்கள். இந்நிலையில் தனக்கான மவுஸ் இருப்பதை அறிந்த சிம்பு இப்போது அதிரடியாக தனது சம்பளத்தை 15 கோடியாக உயர்த்தி விட்டாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்