மீண்டும் வேலையைக் காட்டிய ரஜினி… அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்ததுக்கு காரணம் இதுதான்!

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (16:52 IST)
சன் பிக்சர்ஸ் நிறுவனம் அண்ணாத்த படப்பிடிப்பை நிறுத்தியதற்கு பின்னால் ரஜினிதான் காரணம் என சொல்லப்படுகிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்தது ‘அண்ணாத்த’ திரைப்படம். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது .

ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதும் அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தால் உடனே ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை நடத்த வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்ததாகவும் ஆனால் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் கூட இல்லை என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே தான் படப்பிடிப்புக்கு வர முடியும் என்று ரஜினிகாந்த் பிடிவாதக கூறியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ஒரு கட்டத்தில் அனைத்துப் படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டதால் ரஜினியும் படப்பிடிப்புக்கு வர சம்மதித்தார். இந்நிலையில் இம்மாதம் 12 ஆம் தேதி ஹைதராபாத்தில் படப்பிடிப்பை தொடங்க சன் பிக்சர்ஸ் முடிவு செய்தது. ஆனால் இப்போது ரஜினியின் உடல்நிலையை  மனதில் கொண்டு படப்பிடிப்பைக் கேன்சல் செய்துள்ளதாம். இதற்கு எஸ்பிபி மரணம் மற்றும் விஜயகாந்தின் கொரோனா தொற்று ஆகியவையும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. ஒருவேளை படப்பிடிப்பு வைத்து ரஜினிக்கு ஏதாவது ஒன்று என்றால் தங்கள் நிறுவனத்துக்குதான் கெட்டப் பெயராக அமையும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது.

ஆனால் இது சம்மந்தமாக மற்றொரு செய்தியும் சொல்லப்படுகிறது. அது என்னவென்றால் ரஜினிதான் படப்பிடிப்புக்கு மறுதததாகவும், அதை வெளியே சொன்னால் ரஜினி ரசிகர்களுக்கு அதிருப்தியாக அமையும் என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தாங்களே நிறுத்துவது போல நிறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Source வலைப்பேச்சு

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்