ரஜினிக்காக எழுதப்பட்ட கதையில் நடிக்கிறாரா சிம்பு?

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (14:30 IST)
பத்து தல படத்துக்குப் பிறகு சிம்பு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் ரகசியமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வீடியோவோடு வெளியாகும் என சொல்லப்படுகிறது. நவம்பர் 10 ஆம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அடுத்த ஆண்டுதான் ஷுட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்த படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் தேசிங் பெரியசாமி “ ரஜினி சாருக்காக எழுதிய கதையில்தான் சிம்பு நடிக்கிறார். அந்த கதை ரஜினி சாருக்கு பிடித்திருந்தது. ஆனாலும் அவரால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. இப்போது அதே கதையில் சில மாற்றங்கள் செய்து உருவாக்க உள்ளோம். “ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்