பத்து தல படத்துக்குப் பிறகு சிம்பு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார்.
ஆனால் இப்போது அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தாமதத்துக்குக் காரணம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தபடம் வரலாற்றுப் புனைவு படம் என்பதால் அதற்கான அரங்குகள், கதாபாத்திரங்களுக்கான உடைகள் தயாரிப்பு பணிகளுக்காக நேரம் எடுத்துக் கொள்ளப் படுகிறது என சொல்லப்படுகிறது.