ஜி.வி.பிரகாஷின் ரிபெல் பட ஃபர்ஸ்ட்லுக் வெளியிட்ட சிம்பு

வியாழன், 26 அக்டோபர் 2023 (20:32 IST)
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர், ஜெயில், டார்லிங், அடியே, பேச்சுலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் நடிப்பதுடன் முன்னணி நடிகர்களில் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இன்று சூர்யா, -சுதா கொங்கராவின் புறநானூறு படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ( 100 வது படம்) இணைந்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  ஜிவி.பிரகாஷ்குமார்  நடிக்கும் ரிபெல் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்ரரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்.

இப்படத்தை  நிக்கேஷ் இயக்கவுள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த போஸ்ட்டர் வைரலாகி வருகிறது.  இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கவுள்ளார் என்பதால், இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 

அதிகார மையங்களை அதிர வைப்பதே புரட்சி

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்