சிம்பு 49 படத்தின் ஷூட்டிங்குக்காக வட இந்தியாவில் முகாமிடும் படக்குழு!

vinoth

புதன், 26 மார்ச் 2025 (09:33 IST)
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘பத்து தல’ . அந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதன் பின்னர் அவர் கமல்ஹாசனோடு இணைந்து மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள மூன்று படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. சிம்பு – ராம்குமார் பாலகிருஷ்னன் இயக்கத்தில் உருவாகும் அவரது 49 ஆவது படம் முதலில் தொடங்கவுள்ளது. ஆனால் இன்னும் படத்தின் திரைக்கதையை இயக்குனர் இறுதி செய்யாததால் படம் மே மாதத்தில்தான் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோஹர் மற்றும் மிருனாள் தாக்கூர் ஆகியோர்  நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.  இந்நிலையில் இந்த படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் ஒரு கல்லூரியில் நடப்பது போல திரைக்கதை எழுதப்பட்டுள்ளதாம். இதற்காக புனேவில் உள்ள ஒரு கல்லூரியை படக்குழு இறுதி செய்து, அங்கு 60 நாட்கள் தொடர்ச்சியாக படமாக்க திட்டமிட்டுள்ளதாம்.  தமிழகத்தில் உள்ள கல்லூரியில் படமாக்கினால் தேவையில்லாமல் நடிகர், நடிகர்களைப் பார்க்க கூட்டம் கூடும் என்பதால் வட இந்தியக் கல்லூரியை படக்குழு உறுதி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்