தொற்று நோய் முடிவுக்கு வரும் வரை காத்திருக்க முடியாது… ஸ்ருதிஹாசன் கருத்து!

Webdunia
புதன், 12 மே 2021 (11:42 IST)
நடிகை ஸ்ருதிஹாசன் தொற்று நோய் முடிவுக்கு வரும் வரை காத்திருக்க முடியாது என்று மீண்டும் பணிக்கு திரும்புவது குறித்து பேசியுள்ளார்.

கமலின் மகளான ஸ்ருதி ஹாசன் ஏழாம் அறிவு படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் லக் எனும் இந்தி படத்தில் நடித்தார். இதனால் தொடர்ந்து இந்தி படங்களில் வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். இப்போது தமிழில் லாபம் மற்றும் தெலுங்கில் கிராக் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது தொற்று நோய் குறித்து பேசியுள்ள அவர் ‘தொற்று நோய்க்காலம் முடியும் வரை வேலைக்கு செல்லாமல் காத்திருக்க முடியாது. நிதி பிரச்சனைகளை சமாளிக்க மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டிய தேவை உள்ளது. எனது தேவைகளுக்கு நான் எனது பெற்றோரை சார்ந்திருப்பது இல்லை என்பதால் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் இதுபோன்ற தொற்று நோய் காலங்களில் படப்பிடிப்பு நடத்துவது எளிதில்லை என்பதும் எனக்கு தெரியும்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்