“ஹார்மோன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருக்கேன்…” ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (09:31 IST)
நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் விஜய் சேதுபதியோடு அவர் நடித்த லாபம் திரைப்படம் வெளியானது.

தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார். ஏற்கனவே சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதி நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப்படம் லாபம். கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. இதையடுத்து தற்போது அவர் ‘யாமிருக்க பயமே’ மற்றும் கவலை வேண்டாம் படத்தின் இயக்குனர் DK இயக்கத்தில் உருவாகும் ஒரு த்ரில்லர் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார். விரைவில் இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்போது ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அந்த பதிவில் தான் ஒரு ஹார்மோன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை எவ்வளவு மோசமானது என்பது பெண்களுக்குத் தெரியும் என்றும், ஆனால் அந்த பிரச்சனையை எதிர்கொள்ள கடுமையான உடல் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்