பி எம் டபுள் யு காருடன் புகைப்படம் வெளியிட்ட ஷிவானி!

Webdunia
சனி, 14 ஆகஸ்ட் 2021 (10:07 IST)
நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான ஷிவானி நாராயணன் தனது பி எம் டபுள் யு காரோடு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார். 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். பின்னர் இன்ஸ்டாகிராமில் டான்ஸ் , கவர்ச்சி புகைப்படம் என தொடர்ந்து பதிவிட்டு பிரபலமாகி பிக்பாஸில் நுழைந்தார்.

பிக்பாஸ் மூலமாக பிரபலமான அவர் இப்போது வரிசையாக சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் வாங்கியுள்ள புதிய பி எம் டபுள் யூ காருடன் தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்