கொரோனா வார்டில் சேவை செய்த நடிகைக்கு கொரோனா! – ரசிகர்கள் பிரார்த்தனை!

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (12:47 IST)
கொரோனா வார்டில் செவிலியராக பணிபுரிந்து வந்த பாலிவுட் நடிகை ஷிகா மல்ஹோத்ரா கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் திரைப்படங்களில் அறிமுக நாயகியாக நடித்து வந்தவர் ஷிகா மல்ஹோத்ரா. தற்போது நடிகையாக அறியப்பட்டாலும் அவர் நர்ஸிங்தான் படித்திருந்தார். கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டதும் நடிப்பை விட்டுவிட்டு மருத்துவமனை ஒன்றில் செவிலியராக இணைந்து பணிபுரிந்து வந்தார். இதற்காக பலரும் அவரை பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக ஷிகாவுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்த நிலையில் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண நலத்துடன் திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்