நடிகர் சிம்புவால் சிலம்பாட்டம் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை சனா கான் சினிமா உலகை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானார் சனா கான். ஆனால் அந்த படத்துக்குப் பிறகு பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் பாலிவுட்டில் சில படங்களில் நடித்தார். அங்கும் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் இப்போது திரையுலகை விட்டே விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் நேற்று சமூகவலைதளத்தில் ‘இன்று முதல் இந்த திரையுலகில் இருந்து விலகுகிறேன். எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. இன்று முதல் இல்லாதவர்களுக்கு உதவவும் என்னை படைத்தவர்களின் ஆணையை நிறைவேற்றவும் செயல்பட போகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.