என்னுடன் பணியாற்றிய பின்னர் அஜித்தின் ஸ்டைல் மாறியுள்ளதா?.. ஸ்டண்ட் மாஸ்டர் பெருமிதம்!

vinoth

திங்கள், 7 ஏப்ரல் 2025 (15:56 IST)
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ இம்மாதம் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் த்ரிஷா ,சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

அந்த டிரைலரில் அஜித்தின் அமர்க்களம், தீனா, பில்லா, மங்காத்தா என ஏகப்பட்ட படங்களின் காட்சிகளை நினைவூட்டும் வசனம் மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது அஜித் ரசிகர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும் என்றாலும், அஜித் ரசிகர் அல்லாதவர்களுக்கு கனெக்ட் ஆகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் இதுவரை 50 லட்சம் பேரால் இந்த டிரைலர் பார்க்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில் “அஜித் சாருடன் துணிவு, விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என மூன்று படங்களில் பணியாற்றியுள்ளேன். ஒரு நாள் அஜித் சார் என்னிடம் “மாஸ்டர் உங்களிடம் இணைந்து பணியாற்றிய பிறகு என்னுடைய ஆக்‌ஷன் ஸ்டைலே மாறிவிட்டதாக நண்பர்கள் கூறுகிறார்கள்” என்று சொன்னார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்