அக்சயகுமாருக்கு 2வது வாய்ப்பு தர மறுத்த ஷங்கர்

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2018 (00:59 IST)
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் அக்சயகுமாரின் கேரக்டருக்கு தமிழ் டப்பிங் செய்ய சரியான நபரை ஷங்கர் தேடி வருகிறார். ஒரு முன்னணி நடிகர் இந்த கேரக்டருக்கு குரல் கொடுக்க ஒப்புக்கொண்டு இரண்டு நாட்கள் ஒலிப்பதிவில் கலந்து கொண்டார்.

ஆனால் ஷங்கர் கேட்ட குரல் வடிவத்தில் பேசிய அவருக்கு தொண்டை அலர்ஜி வந்துவிட்டதால் அவர் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அக்சயகுமார், தானே தமிழ் டப்பிங் செய்ய முன்வந்தார். ஆனால் நன்றாக தமிழ் பேச தெரிந்தவர் வேண்டும் என்பதால் அவருக்கு டப்பிங் வாய்ப்பு கொடுக்க ஷங்கர் மறுத்துவிட்டாராம். தற்போது வெறொரு பின்னணி குரல் கலைஞரிடம் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்