உங்களுடைய பாராட்டு விருது கிடைத்ததுபோல் உணர்கிறேன் - எஸ்.ஜே.சூர்யா

சனி, 27 நவம்பர் 2021 (14:54 IST)
மாநாடு படத்தில் முக்கிய கதாப்பாத்தில் நடித்துள்ள நடிகர் எஸ்.,ஜே.,சூர்யாவை சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டியுள்ள நிலையில் இதற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
 
சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி  திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக மாநாடு அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குனர் வெங்கட்பிரபு , நடிகர் எஸ்.,ஜே.சூர்யா உள்ளிட்ட படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். இதை மகிழ்ச்சியோடு படக்குழுவினர் ரசிகர்களோடு பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னை செல்போனில் அழைத்து, என் நடிப்புத் திறமையைப் பாராட்டியது விருது கிடைத்ததுபோல் உணர்கிறேன். உங்களுடைய பாராட்டு எனக்கு ஊக்கம் அளிப்பதாக என் பயணத்திற்கு மேலும் வலிமை ஊட்டுவதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்