'' உழைப்பால் உயர்ந்த எஸ்.ஜே.சூர்யா'' – ரசிகர் பாராட்டு

வெள்ளி, 3 டிசம்பர் 2021 (23:32 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம்  மாநாடு. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 

குறிப்பாக நடிகர் சிலம்பரசன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவரும் கடும் உழைப்ப்பை இப்படத்தில் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களின் உழைப்பின் பலனாக படமும் அனைத்து தரப்பினரிடையே பாராட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாநாடு படக்குழுவினரையும், எஸ்.ஜே.சூர்யாவையும் பாராட்டினார்.

இந்நிலையில்  நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் ரசிகர் தனது டுவிட்டர் பக்கத்தில், ரஜினி சார்.. விஜய் சார்... வடிவேலு சார் வரிசையில் குழந்தைகளுக்குப் பிடித்த நடிகர் உழைப்பால் உயர்ந்த S J சூர்யா சார்தான்.. @iam_SJSuryah எனப் பதிவிட்டிருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்