சன் பிக்சர்ஸோடு பிரம்மாண்டக் கூட்டணி அமைக்கும் ஷங்கர்… டேக் ஆஃப் ஆகிறதா வேள்பாரி?

vinoth
சனி, 11 மே 2024 (14:10 IST)
இயக்குனர் ஷங்கர் எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களின் வெற்றியை அடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த கதையை அவர் 1000 கோடி ரூபாயில் மூன்று பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளதாகவும், அதில் பாலிவுட் ஹீரோ ரண்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறனை சந்தித்து இருவரும் இணைந்து ஒரு படம் பண்ண பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஷங்கர் முன்பே திட்டமிட்டிருந்த வேள்பாரி படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்